Re-Accredited with ‘A’ grade - 3.18 by NAAC
தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினரால் 'A ' அங்கீகாரம் பெற்றது

முதல்வர் முனைவர் அ.மாதவி அவர்கள் 02.09.1996 அன்று அரசு கல்லூரிப் பணியில் சேர்ந்து இன்று வரையில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார். இவர் எம்.ஏ., எம.;ஃபில்., பிஎச்.டி., பட்டங்களைப் பெற்றுள்ளார். 30-ஆம் ஆண்டில் உயர் கல்வித் துறையில் பணியாற்றி வருகின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற இவர் தர வரிசையில் 4-ஆம் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து புதுவைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பயின்ற இவர் முதல் இடத்தையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இதே பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்., பட்டமும் பெற்றுள்ளார். அப்பட்டத் தேர்விலும் முதலிடம் ,தங்கப் பதக்கம் மற்றும் பாிசுத் தொகை பெற்றுள்ளார். மேலும் அப்பல்கலைக் கழத்திலேயே மிகு உயர்தரமுடையது என்ற பாராட்டுடன் ஆய்வேட்டை சமர்ப்பித்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வில் முதலில் விரிவுரையாளர் தகுதித் தேர்விலும் பின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரால் இதுவரை 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றுப் பல பாிசுகளும் பெற்றுள்ளார்.
தமது கல்லூரிப் பணியை 02.09.1996 அன்று திண்டிவனம், திரு.ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய இவர் 08.12.1996 வரை அங்குப் பணியாற்றினார். அதன்பின் 09.12.1999 முதல் 04.12.2007 வரையில் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியிலும், 06.12.2007 முதல் 23.01.2020 வரை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார். அதன்பின் 24.01.2020 முதல் இரண்டாம் நிலை கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு பெற்று திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19.06.2023 வரை பணியாற்றினார். 19.06.2023 முதல் முதல்நிலை கல்லூரி முதல்வராகக் கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரியில் 11.08.2025 வரை பணியாற்றி அங்கிருந்து பணிமாறுதலில் நாமக்கல் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 18.08.2025 முதல் முதல்வராகப் பணியாற்றி வருகின்றார்.