Namakkal Kavignar Ramalingam Government Arts College for Women
img-logo
AQAR NIRF GOLDEN JUBILEE CELEBRATION KALAIGNAR CENTENARY CELEBRATION RANKLIST(2025-2026)
contact-bg-an-01

நாட்டு நலப்பணித்திட்ட அலகுகளுக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்

1. நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள்:

பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட அலகுகளில் ஒரு அலகிற்கு 100 நபர்கள் வரை மட்டுமே நாட்டு நலப்பணித்திட்ட (NSS volunteers) தன்னார்வலர்களாக இருக்கலாம். அதில், முதலாம் ஆண்டு மாணாக்கர்களில் இருந்து 50 நபர்கள் வரை சேர்க்கை மேற்கொண்டும், முந்தயை ஆண்டில் சேர்க்கை மேற்கொண்ட (முதலாம் ஆண்டு மாணாக்கர்கள்) தற்பொழுது இரண்டாம் ஆண்டு மாணாக்கர்கள் 50 நபர்கள் என மொத்தம் 100 நபர்கள் வரையில் ஒரு அலகு ஆனது இயங்க வேண்டும்.

முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித்திட்ட (NSS Volunteers) தன்னார்வலர்களின் சேர்க்கையின் போது அம்மாணாக்கர்கள் தங்களது பள்ளி இறுதி படிப்பின் (+2 level) போது நாட்டு நலப்பணியில் ஈடுபட்ட மாணாக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும், சிறுபான்மை பிரிவைச் சார்ந்த SC/SC(A)/ST பிரிவினைச் சார்ந்த மாணாக்கர்களையும், இருபாலர் கல்லூரிகளில் பெண்களையும், அயல் நாட்டைச் சார்ந்த மாணாக்கர்களையும் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சேர ஊக்கப்படுத்திட வேண்டும். இவர்களை நாட்டின்...

Rules & Regulations National Service Scheme
Namakkal Kavignar Ramalingam Government Arts College for Women